×

தாமிரபரணி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க நெல்லை, தூத்துக்குடி ஆட்சியருக்கு உத்தரவு

நெல்லை: தாமிரபரணி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க நெல்லை, தூத்துக்குடி ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் தாமிரபரணி ஆற்றை எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்துக்கொண்டிருக்காமல் கள ஆய்வும் செய்வோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நெல்லையை சேர்ந்த சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று நீரால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கள் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தொழிற்சாலை கழிவு கலப்பதால் தாமிரபரணி ஆற்று நீர் முழுவதும் மாசடைந்துள்ளது.

Tags : ruler ,Tuticorin ,Thamirabarani , Thamirabarani
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...