×

காங்கிரசை விட்டு விலகுவேன்: சித்தராமையா திடீர் மிரட்டல்

பெங்களூரு: கர்நாடகாவில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய இரு பதவிகளை சித்தராமையா வகித்து வருகிறார். கடந்த இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதத்தை கட்சி மேலிட தலைவர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த ராஜினாமா கடிதத்தை மேலிடம் ஏற்கவில்லை. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் பதவியை பிரிக்க வேண்டும் என்று மேலிடத்தை கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இரு பதவிகளை பிரித்து அறிவித்தால் தனது அரசியல் பலம் குறைந்துவிடும் என சித்தராமையா  கருதுவதாகக் கூறப்படுகிறது. எனவே இரு பதவிகளை பிரிக்காமல் ஒரே பதவியாக இருந்தால் மட்டும் அதில் தொடர தயார் என சித்தராமையா மேலிட  தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி வந்தார். இந்த  பரபரப்பான சூழ்நிலையில், இரு பதவிகளுக்கு தனித்தனியாக தலைவர்களை அறிவித்தால்,  கட்சியிலிருந்து விலக தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின்  மேலிடத்திற்கு சித்தராமையா எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : Siddaramaiah ,Congress , Congress , quit, quit, Siddaramaiah, sudden blackmail
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...