×

மாதனூர் அடுத்த அகரம் கூட்ரோட்டில் ரூ7.50 கோடியில் கட்டப்படும் அரசு கல்லூரி இந்த ஆண்டாவது திறக்கப்படுமா?... மாணவர்கள் எதிர்பார்ப்பு

மாதனூர்: மாதனூர் அடுத்த அகரம் கூட்ரோட்டில் ரூ.7.50 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை கல்லூரி இந்த ஆண்டாவது திறக்கப்படுமா என  மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். மாதனூர் அடுத்த அகரம்சேரியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு வேலூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, மாதனூர், ஆம்பூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வருகின்றனர்.

தற்போது அங்கு சரியான பேருந்து வசதி மற்றும் இதர வசதிகள் குறைவாக இருப்பதால் இதற்கு மாற்றாக நிரந்தரமாக அகரம் கூட்ரோட்டில் கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2018ம் ஆண்டு சுமார் ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை 80 சதவீத கட்டுமான பணிகள் மட்டுமே நடந்துள்ளது. எனவே மீதியுள்ள பணிகளை விரைவாக நிறைவு செய்து இந்த ஆண்டே செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Government College ,Madurai ,Madanur , Government College, Madanur
× RELATED இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு