×

இந்தியாவிலேயே புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்ற மாநிலம் தமிழ்நாடு: அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் பழனிசாமி உரை

ராமநாதபுரம்: தமிழகத்தில் புதியதாக அமையவுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றான ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் பகுதியில் அமைய உள்ள புதிய மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறப்புகள் மற்றும் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார்.

முதல்வர் பழனிசாமி உரை:
 
* ராமநாதபுரம் மாவட்டம் புண்ணிய பூமி-ராசியான மாவட்டம்.
* ராமநாதபுரம் மாவட்டத்தை உருவாக்கிய பெருமை எம்ஜிஆரை சேரும்.

* 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் முதல் அடிக்கல் நாட்டப்படும் இடம் ராமநாமபுரம்.
* சமண நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரமாக திகழும் மாவட்டம் ராமநாதபுரம்.
* ஏழை மாணவர்கள் படிக்க அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படுகிறது.
* சுகாதாரத்துறையில் சிறந்த முன்னுதாரணமாக திகழும் மாவட்டம் ராமநாதபுரம்.

* மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்ற புதிய மருத்துவக் கல்லூரி.
* ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது.
* 10 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* இந்தியாவிலேயே புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்ற மாநிலம் தமிழ்நாடு.

* தொடர்ந்து, மத்திய அரசை வலியுறுத்தியதால் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பெற்றுள்ளோம்.
* புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதை பெரும் மகிழ்ச்சியாகவும் வெற்றியாகவும் கருதுகிறேன்.
* கடந்த 8 ஆண்டுகளில் 1350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
* ஜப்பான் நிதியுதவியுடன் ரூ.1637 கோடி செலவில் நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.

* சிறுபான்மையினரை தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு திகழும்.
* மக்களிடையே யார் பிளவு ஏற்படுத்த முயன்றாலும் முறியடிக்கப்படும்.
* தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழும்.
* ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

* மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துகிறோம்
* புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ மாணவர் இடங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன
* கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


Tags : Tamilnadu ,colleges ,State ,speech ,India ,laying ceremony ,Palanisamy , State of India receives 11 new medical colleges Palanisamy's speech at the laying ceremony
× RELATED முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு