×

ஆணழகன் போட்டியில் ‘மிஸ்டர் திருமங்கலம்’ தேர்வு

திருமங்கலம்:  திருமங்கலத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் கவுதம் முதலிடம் பிடித்து மிஸ்டர் திருமங்கலம் பட்டத்தை வென்றார்.   மதுரை மாவட்டம், திருமங்கலம் அனுமான் உடற்பயிற்சி பள்ளி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘மிஸ்டர் திருமங்கலம்’ போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 62வது ஆண்டு விழாவையொட்டி மிஸ்டர் திருமங்கலம் போட்டிகள் நடந்தன. போட்டிகளை திமுக முன்னாள் நகர செயலாளர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். உடற்பயிற்சி பள்ளியின் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். போட்டிகளில் திருமங்கலம், மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

வீரர்கள் 7 வகையான உடற்கட்டுகளை காட்டி தங்களது திறனை வெளிப்படுத்தினர். இதில் முதல் இடத்தை பிடித்த திருமங்கலத்தை சேர்ந்த கவுதம் ‘மிஸ்டர் திருமங்கலமாக’ தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு சாம்பியன் பட்டம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த மதுரையை சேர்ந்த முத்துராஜ்க்கு பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக சிலம்பம், படைவீச்சு, காட்டாக்குஸ்தி, களரி, வாளவீச்சு, கேடயம் வாள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகளை பள்ளி மாணவ, மாணவியர்கள் நடத்தி காட்டினர். ஏற்பாடுகளை செயலாளர் பெரியசாமி, பொருளாளர் முருகேசன் செய்திருந்தனர்.


Tags : Mr. ,Thirumangalam ,Mister Thirumangalam ,election , Mister Thirumangalam.election selected.competition
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்