×

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் 2 யானைகள் பலி: மின்சாரம் தாக்கி இறந்ததா? வனத்துறை விசாரணை

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு தோட்டத்தில் 2 யானைகள் இறந்து கிடந்தது. இவை மின்சாரம் தாக்கி இறந்ததா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

விவசாயிகளும், வனத்துறையினரும் இரவு நேரத்தில் கண் விழித்து யானைகளை விரட்டினாலும் பயிர் சேதத்தை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கரளவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்புசாமி (45) என்பவரது கரும்பு தோட்டத்தில் 2 யானைகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், 2 யானைகள் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர். அப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து தீவனம் தேடி வெளியேறிய காட்டு யானைகள் விவசாய தோட்டத்து மின் வேலியில் சிக்கி இறந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : sugarcane plantation ,Dalawadi ,Forest Department ,investigation , 2 elephants killed,plantation , electricity die, Forest Department investigation
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...