×

மனித உரிமை மாநாட்டில் இந்தியா பதிலடி: பாகிஸ்தானுக்கு 10 அறிவுரை

ஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் பதிலடி கொடுத்தார். அவர் தனது பேச்சில், பாகிஸ்தானுக்கு 10 விதமான அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி அளிக்கும் தவறான தகவல்களை மாற்றுங்கள்.
2. தீவிரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.
 3. பாகிஸ்தானில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்.
4. ஜனநாயகத்தை பலப்படுத்த பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.
5. மத சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ பெண்களை கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள்.
7. பலுசிஸ்தான், சிந்து, கைபர்பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்.
8. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
9. முஸ்லிம் பிரிவுகளான ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் மீதான துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும்.
10. தற்கொலை படை தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி குழந்தைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.



Tags : Pakistan ,human rights conference ,India , Human Rights Conference, India, Pakistan
× RELATED பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி