×

கடனுக்காக தனியார் வங்கி நோட்டீஸ் ஜப்தி அச்சத்தில் விவசாயி தற்கொலை: மயிலாடும்பாறை அருகே பரபரப்பு

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே கடனைக் கட்டச்சொல்லி தனியார் வங்கி நோட்டீஸ் அனுப்பியதால், ஜப்தி அச்சத்தில் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே‌ சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (50). விவசாயி. இவர், தனியார் வங்கியில் விவசாயத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே, முறையாக கடனை கட்டாததால்,  வங்கியிலிருந்து பலமுறை பணம் கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால், விவசாய நிலத்தை ஜப்தி செய்து விடுவார்களோ என அச்சமடைந்த தர்மலிங்கம், வீட்டில் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து  மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரது மகன் விவேக் மற்றும் அக்கம்பக்கத்தினர், தேனியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து  கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : suicide , Private Bank, Notice ,Debt,Mayiladuthurai
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...