×

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி தூத்துக்குடி வந்த ஹாங்காங் கப்பலில் தீவிர சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த ஹாங்காங் ஆயில் டேங்கர் கப்பலான எம்டி ஹன்னாவில் சுகாதார துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் வரும் அனைத்து கப்பல்களின் ஊழியர்களுக்கும் சுகாதார துறையினர் பல்வேறு பரிசோதனைகள் செய்த பின்னரே கப்பல்கள் சரக்கு தளத்திற்கு வர  அனுமதிக்கின்றனர்.இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட எம்டி ஹன்னா என்ற ஆயில் டேங்கர் கப்பல் வந்துள்ளது. இந்தோனேசிய தீவான பாடம் துறைமுகத்தில் இருந்து வந்த இந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 21 பேர்  இருந்துள்ளனர்.

இந்த கப்பல் துறைமுகத்தின் 2வது தளத்திற்கு வருவதற்காக கடந்த 26ம்தேதி இரவு முதலே வெளித்துறைமுகத்தில் காத்திருந்தது. இதையடுத்து நேற்று துறைமுக மருத்துவகுழு  மாலை வரை கப்பலில் ஆய்வு மேற்கொண்டது.மருத்துவ அதிகாரிகளின் சான்றுக்கு பின்னரே அந்த கப்பல் 2வது தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என உறுதியாக தெரிந்தாலும்,  8000 மெட்ரிக் டன் எடையிலான பாம் ஆயிலை இறக்கும் வரை கப்பலை விட்டு ஊழியர்கள் யாரும் துறைமுகத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Tags : Coroner ,Virus Impact Echoes Intensive Testing ,Hong Kong ,Tuticorin , Coronavirus virus , Intensive,Hong Kong ,Tuticorin
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...