×

தஞ்சையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அடிமாட்டு விலைக்கு வாங்கி செல்லும் வைக்கோல்: கட்டு ரூ.20க்கு விற்பனை

கும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அடிமாட்டு விலைக்கு வைக்கோல் கட்டுகளை வாங்கி செல்கின்றனர். ஒரு கட்டு வைக்கோல் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்தது. இதில் 50 சதவீதம் சம்பா அறுவடை முடிந்த நிலையில் தற்போது கோடைமற்றும் தாளடி சாகுபடி பணி துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டுகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு தேவைப்படும் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஒரு கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சம்பா அறுவடை பணி ஒரே நேரத்தில் துவங்கியதால் வைக்கோல் கட்டுகள் வரத்து அதிகமானதால் ஒரு கட்டின் விலை ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு தமிழகம் முழுவதும் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அறுவடை இயந்திரத்தை கொண்டு வந்து வயலில் அறுவடை செய்து நெல்களை கொடுத்து விட்டு வைக்கோல்களை எடுத்து சென்றனர். இந்தாண்டு வாய்க்கால், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமானதால் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சம்பா, தாளடி சாகுபடி செய்தனர்.

இதனால் வைக்கோல் வரத்து அதிகமாக இருப்பதால் விவசாயிகள் தேவைக்கு மேல் உள்ள வைக்கோல் கட்டுகளை அடிமாட்டுக்கு விலைக்கு குறைத்து விற்பனை செய்கின்றனர். இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கரூர், சேலம், எடப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயத்துக்காக தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அனைத்து பகுதிகளிலும் சம்பா நெற்பயிர், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் அதிகமானது. இதனால் வைக்கோலின் தேவைகள் குறைந்தது. இதனால் இந்தாண்டு ரூ.20க்கு மேல் வைக்கோல் வாங்குவதற்காக யாரும் இல்லாமல் வயலிலேயே கேட்பாரற்று கிடக்கிறது.

மேலும் கோவை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் காளான் வளர்ப்புக்காக வைக்கோல் அதிகளவிலும் ஏற்றி செல்கிறார்கள். காளான் வளர்ப்புக்கு பிரதானமானது வைக்கோல். அதுவும் காவிரி டெல்டா பகுதி வைக்கோல் தரமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளில் பேப்பர் தயாரிக்கவும் வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது. எனவே கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவில் வைக்கோல் வரத்துள்ளதால் வைக்கோல் கட்டின் விலை வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : outsiders ,Hay , Ash, straw
× RELATED டொரண்டோ பட விழாவில் சுசி கணேசன் படம்