×

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ல் தூக்கு தண்டனை நிறைவேறுமா? : மத்திய அரசு தொடர்ந்த வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு

புதுடெல்லி, நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு  உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி அதிகாலை 6மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இதே விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 5ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ல் தூக்கு தண்டனை

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதையடுத்து வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து திகார் சிறைத்துறை நிர்வாகத்தின் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாட்டியாலா நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற கடந்த 17ம் தேதி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் பவன் குமார் குப்தாவை தவிர அனைவரது கருனை மனுக்களையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நிராகரித்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு மேல்முறையீட்டு மனு

இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷன் மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அதனை தடுத்து நிறுத்தும் விதமாக அவர்களது தரப்பில் ஏதேனும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அதனை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என தெரிவித்தார்.

தூக்கு தண்டனை நிறைவேறுமா
?

இதையடுத்து  நீதிபதிகள்,நிர்பயா பாலியல் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதில் மார்ச் 3ம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலுவையில், மத்திய அரசு தொடர்ந்த வழக்கை வரும் 5ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதில் மீண்டும் தடை ஏற்படுமோ என்ற கேள்வியெழுந்துள்ளது.

Tags : convicts ,court ,government ,Will Nirbhaya ,Central , Central Government, Nirbhaya, Sex, Murder, Offenders, Death Penalty, Dell, Patiala, Court, Order, Thikar Prison Department, Letter
× RELATED 9வயது சிறுமி கொலை வழக்கு புதுவை...