×

வேலூர் கஸ்பா ரயில்வே மேம்பாலம் அருகே கொட்டி எரிக்கப்படும் மாநகராட்சி குப்பைகள்: பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு

வேலூர்: வேலூர் கஸ்பா ரயில்வே மேம்பாலம் அருகே மாநகராட்சி குப்பைகள் எரிக்கப்படுவதால், பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிக்குள்ளாகின்றனர். வேலூர் கஸ்பா ரயில்வே மேம்பாலம், கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு நடுவில் உள்ள பகுதியில் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதில் ஏற்படும் புகை மூட்டத்தால் அப்பகுதியில் முதியவர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் கஸ்பாவில் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் கொட்டி எரிக்கின்றனர். இதனால், இங்கு புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. இதை சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளதால், வீடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் ரயில்வே மேம்பாலத்தின் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகளும், ரயிலில் பயணிப்பவர்களும் பாதிப்படைகின்றனர். எனவே, மாநகராட்சி குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதை தடுத்து, திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு சென்று எருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Coroner debris ,Vellore Kasba Railway Bridge: Impact of Breathing on the Public Vellore Kasba Railway Bridge ,public , Vellore, Kasba Railway Bridge, Rubbish
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...