×

போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ

போடி:  தேனி மாவட்டம், போடி அருகே மேற்கு மலைத்தொடர்ச்சி மலை அகமலையில் தொடங்கி வடக்குமலை, குரங்கணி, கொட்டகுடி, டாப்ஸ்டேஷன், போடிமெட்டு என தேக்கடி வரை செல்கிறது. போடி அருகே உள்ள ராசிங்காபுரம், சிலமலை, மணியம்பட்டி  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகின்றன.  எனவே, போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் எரியும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodhi ,Western Ghats , Wildfire, Western Ghats near Bodhi
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...