×

ஒட்டன்சத்திரம் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி கிராமத்தில் இராயர்குல வம்ச குரும்ப இன மக்களுக்கு சொந்தமான மகாலெட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடம்தோறும் சிவராத்திரிக்கு மறுநாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் பரம்பரை பூசாரி பூச்சப்பன் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Tags : Head , Oddanchatram, coconut, VOW
× RELATED உலகின் முதன்முறையாக ரோபோக்கள் மூலம்...