×

நெல்லை விடுதியில் 4 வயது சிறுவன் கொலை: தாய் சிக்கினார்; காதலன் கைது

நெல்லை:  நெல்லை மாவட்டம்  விகேபுரம் அருகே டானா ஆம்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர்  அந்தோணி பிரபு. இவருக்கும், பொள்ளாச்சியைச் சேர்ந்த தீபா (28) என்பவருக்கும்  கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு  4 வயதில் யோகேஷ்  என்ற மகன் உள்ளான். காஸ் டேங்கர் லாரி டிரைவரான அந்தோணிபிரபு கேரளா,  கர்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று  விடுவார். தீபா, நர்சிங் முடித்துள்ளார்.இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் சுயஉதவிக்குழு கடன் வசூலிக்கும் அருணாசலபுரத்தை சேர்ந்த சொரிமுத்து  என்பவருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. உறவினர் ஒருவருக்கு தீபா சுயஉதவிக்குழுவில் கடன் பெற்று இருந்ததால் அதை  வசூலிக்க வந்தவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அவருடன் மகனையும் அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு  சென்று வந்தார். கடந்த 20ம்தேதி மகனுடன் வீட்டை விட்டு வெளியேறிய  தீபா, சொரிமுத்துவுடன் நெல்லை புதிய பஸ்  நிலையம் அருகே உள்ள விடுதியில்  தங்கியிருந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் 3 பேரும் நெல்லை டவுன் நெல்லையப்பர்  கோயிலுக்கு சென்றனர். அப்போது தற்செயலாக அந்தோணிபிரபு தனது மனைவிக்கு போன்  செய்தார். போனை  எடுத்த யோகேஷ், தந்தையிடம் நெல்லையப்பர் கோயிலுக்கு  அம்மாவுடன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த அந்தோணிபிரபு, தீபாவிடம் வீடியோ காலில் வரும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் போனை ஆப்  செய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சொரிமுத்து, யோகேஷை கோயிலில் வைத்து தாக்கியதாக  தெரிகிறது. விடுதிக்கு வந்ததும் மீண்டும் அவனை சொரிமுத்து தாக்கியுள்ளார். இதில் கன்னத்தில் அடிபட்டு மயங்கி  விழுந்த அவனை  இருவரும் நெல்லை அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி சேர்த்துள்ளனர். நேற்று  காலை யோகேஷ் இறந்தான். இதற்கிடையில் சொரிமுத்து தலைமறைவானார். தகவல்  அறிந்து மேலப்பாளையம் போலீசார் சென்று தீபாவை பிடித்து விசாரணை  நடத்தினர். அப்போது அவர் முதலில் சொரிமுத்து தாக்கியதாக கூறிவிட்டு பின் பஸ்சில் விழுந்துவிட்டதாக முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார்  தீபாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் கைது: இதுகுறித்து சிறுவனின் தந்தை அந்தோணிபிரபு புகாரின்படி மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கள்ளக்காதலன் சொரிமுத்துவை கைது செய்தனர்.

Tags : Lover ,Paddy Inn , Paddy , 4-year-old ,boy,mother trapped; Lover arrested
× RELATED மணிகண்டனின் லவ்வர்