×

மஷ்ரூம் சோயா புலாவ்

செய்முறை : முதலில் பாஸ்மதி அரிசியையும், பருப்பையும் களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். சோயாவை வெந்நீரில் நனைத்து பிழிந்து எடுத்து வைக்கவும். மற்ற காய்கறிகளை அலசி நறுக்கி வைக்கவும். குக்கரில் எண்ணெயை காய வைத்து, அதில் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடிக்க விட்டு பல்லாரி சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, கொத்தமல்லி, மஷ்ரூம், சோயா, மிளகாய்தூள், மஞ்சள்தூள், வாழைக்காய், கேரட், உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்.பிறகு பாஸ்மதி அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து தேங்காய்ப்பால் ஒன்றுக்கு ஒன்றரை பங்கு வீதம் ஊற்றி கொதிக்கவிட்டு, குக்கரை மூடும்போது கீரையை பொடியாக அரிந்து சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். 5 நிமிடம் அதே சூட்டில் தம்மில் விட்டு இறக்கவும்.சுவையான மஷ்ரூம் சோயா கீரை புலாவ் தயார்.

Tags : Mushroom Soya Pulau , Mushroom Soya Pulau
× RELATED அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில்...