×

பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மற்றும் டுடோரியல் சென்டர்களில் பயிலும் தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு கடந்த ஆண்டு வரை தனித் தேர்வு மையங்கள் கிடையாது. இந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டாலும், இவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுத உள்ளனர். இதனால் தனித்தேர்வர்களுக்கென ஒரு வினாத்தாளும், மாணவர்களுக்கென ஒரு வினாத்தாளும் தயாரிக்கப்பட உள்ளது.

குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தனித்தேர்வர்களுக்கென இந்த ஆண்டு தனி தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு , முதல் முறையாக  புதிய பாடத்திட்ட அடிப்படையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது . எனவே இந்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. பழைய பாடத்திட்ட முறையில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பழைய பாடத்திட்ட  அடிப்படையில் கேள்வித்தாள் வழங்கப்பட உள்ளது. வினாத்தாள் வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு , புதிய நடைமுறையை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags : selection center ,election ,Select Department , General Selection, Selection, Selection Center, Sector
× RELATED மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு...