×

தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் தேர்வு: ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவதால் தேர்வர்கள் அதிருப்தி

மதுரை:  தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர், மின்கணக்கீட்டாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்திருந்தது. இத்தேர்வினை எழுத விரும்பும் தேர்வர்கள், ஆன்லைன் மூலமாகவும், வங்கிகள் மூலமாகவும் தேர்வு கட்டணத்தை செலுத்தினர்.

இதில் தேர்வு கட்டணத்துடன் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தலா 90 ரூபாய் வீதம் 180 ரூபாய்  ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான கட்டணத்துடன்  ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டிருப்பது தேர்வர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிஎன்பிஎசி, இரயில்வே என பல்வேறு தேர்வுகளுக்காக எந்த வரியும் வசூலிக்கப்படாத நிலையில் தமிழ்நாடு மின்சாரம் நடத்தும் தேர்வுகளுக்கு  ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது ஏன்? என தெளிவுபடுத்த வேண்டுமென்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu Electricity Board ,GST ,Tamil Nadu Electricity Board Exam: GST Tax Collection With Selectors , Tamil Nadu, Power, Personnel Selection, GST, Dissatisfaction
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...