நியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 55 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. அதன்படி இந்திய அணி ஆட்டநேர முடிவில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது.

பிரித்வி ஷா 16, புஜாரா 11, கேப்டன் கோலி 7 ரன்களில் நடையை கட்டினர். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த அகர்வால் 34 ரன்களிலும், விஹாரி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது. இதனையடுத்து முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரஹானே 38 ரன்களும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து பந்து வீச்சில் ஜேமிசன் 3, சவுத்தி, போல்ட் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Stories:

>