×

விழுப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக 70 வருட அரசமரம் அகற்றம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி மற்றும் கழிவு வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த நவம்பர் மாதம் விழுப்புரம் மாதா கோயில் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த பழமை வாய்ந்த அரச மரத்தை அகற்ற முற்பட்டபோது அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு மாதா கோயில் நிறுத்தம் அருகே இருந்த பழமை வாய்ந்த அரச மரம் அகற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று சவீதா நிறுத்தம் அருகே இருந்த 70 வருட பழமை வாய்ந்த அரசமரம் வேருடன் அகற்றப்பட்டது. அப்பொழுது அவ்வழியே செல்லும் குடிநீர் பாசன குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வழிந்தோடியது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மரங்களை அகற்றாமல் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் நடந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags : Villupuram ,road ,work , Villupuram, 70 years of royal tree, removal
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...