×

கடுகுசந்தை அரசு பள்ளி முன்பு குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்: கிராமமக்கள் அவதி

சாயல்குடி: கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள கடுகுசந்தை அரசு பள்ளி முன்பு காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. கிராமங்களுக்கு தண்ணீர் போய் சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2009-10ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கடுகுசந்தை, கீழச்செல்வனூர், சிக்கல் பகுதிக்கு ராட்சத சிமென்ட் பூசப்பட்ட இரும்பு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் கடுகுசந்தை கும்பசாலையிலுள்ள தொடக்கப்பள்ளி முன்பு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தண்ணீர் வழிந்தோடி வீணாகி வருவதால், மற்ற கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி முன்புள்ள பஸ் ஸ்டாப்பிற்கு இப்பகுதியினர் வந்து காத்திருந்து செல்கின்றனர். இந்நிலையில் தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அருகிலுள்ள ஏர்வால்வு தொட்டி மூடாமல் திறந்து கிடக்கிறது. இதில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்தாலும் கூட, சிலர் தொட்டிக்குள் சோப்பு போட்டு குளித்தல், துணிகளை துவைத்தல், டிராக்டர் டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்தல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தொட்டி சேதமடைந்து கிடக்கிறது. பள்ளி முன்பு குழாய் உடைப்பு மற்றும் ஏர்வால்வு தொட்டிகளிலிருந்து தண்ணீர் வழிந்தோடி இரவு நேரங்களில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதால், கிராமங்களுக்கு தண்ணீர் போய் சேராததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள புகார் கூறுகின்றனர். எனவே சேதமடைந்த குழாய், ஏர்வால்வு தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village villagers ,Cauvery , Mustard, Government School, Pipe, Cauvery Drinking Water, Villagers
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி