×

எனக்கு சைக்கிளே போதும் பாதுகாப்பு தேவையில்லை: பாஜ மீது அகிலேஷ் காட்டம்

லக்னோ: லக்னோவில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:   எனக்கு பாதுகாப்பு அவசியமில்லை. நான் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். ஆனால், உள்ளூர் போலீஸ் ஆய்வாளர் எனது செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு ஆசைப்படுகிறேன். எப்படி எனது கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அவர் வர முடியும்? எனக்கு வழங்கப்பட்டு வந்த தேசிய சிறப்பு படை (என்எஸ்ஜி) பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது ஏன்? எனது வீடு மற்றும் வாகனத்தை பாஜ திரும்ப எடுத்துக் கொண்டது. எனது பாதுகாப்பையும் திரும்ப எடுத்துக் கொண்டனர். நான் சைக்கிளை மட்டும் விரும்புகிறேன். சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது,” என்றார். சமாஜ்வாடி கட்சியின் சின்னம் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Baja ,Akhilesh , Bjp, Akhilesh
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...