×

ஐஜிஐ ஏர்போர்ட் வழியே 42 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தியவர் கைது

புதுடெல்லி:  வாசனை திரவிய கேன்களுக்குள் மறைத்து 42  லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்ற நபரை இந்திராகாந்தி விமான நிலைய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பழைய டெல்லியை சேர்ந்தவர் முகமது அர்ஷ். இவர் துபாய் செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தை பிடிப்பதற்கு ஐஜிஐ விமான நிலையம் வந்தார். அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சிஐஎஸ்எப்) அவரை மடக்கி சோதனையிட்டனர்.

அவர் அளித்த தகவல்களும் முன்னுக்கு பின் முரணமாக இருந்தது. இதையடுத்து அவரது உடமைகள் சோதனையிடப்பட்டதில் அதில் வாசனை திரவியங்கள் அடங்கிய கேன்களில் வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கரன்சிகள் மதிப்பு இந்திய ரூபாயில் 42 லட்சம் ஆகும் என தெரிவித்தனர். 


Tags : IGI Airport IGI Airport , person arrested , smuggling ,42 lakh foreign currencies, IGI Airport
× RELATED பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது