×

சத்தி - மைசூர் நெடுஞ்சாலையில் வாகனங்களை துரத்தும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் பீதி

சத்தியமங்கலம்: சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நின்று வாகனங்களை துரத்தும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக இருமாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது இந்த சாலையை கடந்த செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தேசிய நெடுஞ்சாலையோர வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை ஆசனூர் அருகே சாலையோரத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் யானை, வாகனங்களை துரத்த முயன்றது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று யானை நடமாட்டமுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர்.

Tags : Motorists ,highway ,Sathi-Mysore ,Single Elephant Chasing Vehicles: Motorists Panic ,Sathi-Mysore Highway , Sati, Mysore, Highway, Single Elephant, Motorists
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!