×

புதுவை கவர்னர் கிரண்பேடி டெல்லியில் முகாம்

புதுச்சேரி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் கவர்னர் கிரண்பேடி  டெல்லியில் முகாமிட்டுள்ளார். புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு  பதவி வகித்து வருகிறது. தனது அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு  மத்திய பாஜக அரசு கவர்னர் கிரண்பேடி மூலம் முட்டுக்கட்டை போட்டு வருவதாக  ஆளுங்கட்சியினர் அவ்வப்போது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனிடையே நடந்து  முடிந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மத்திய அரசின் குடியுரிமை  சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக  எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிறப்பு சட்டசபை கூட்டம் முடிந்த கையோடு  முதல்வர் நாராயணசாமி டெல்லி விரைந்தார்.

அங்கு அமைச்சர்களுடன் மத்திய  அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறார். அவரைதொடர்ந்து, கவர்னர் கிரண்பேடியும் 14ம்தேதி திடீரென டெல்லி விரைந்தார். அங்கு  3வது நாளாக முகாமிட்டுள்ள அவர் இன்றிரவு புதுச்சேரி திரும்புகிறார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்  நிறைவேற்றிய விவகாரத்தில் கவர்னரின் அறிக்கையை வைத்து மத்திய அரசு  நடவடிக்கை எடுக்கலாம் என்ற தகவல் பரவிவரும் நிலையில், கவர்னரின் டெல்லி  பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : governor ,Purna ,camp ,Kurnapady ,Delhi Puthuvai , Puthuvai, Governor Kurnapady, Camp in Delhi
× RELATED சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு