×

போடியில் விளைச்சலும் இல்லை..விலையும் இல்லை : பருத்தி விவசாயிகள் கவலை

போடி: போடி பகுதியில் பருத்தி சாகுடியில் மசூலும், விலையும் குறைந்து விட்டதால் அறுவடை துவங்கியும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.போடி  அருகே சிலமலை, சூலப்புரம், மணியம்பட்டி, ராசிங்காபுரம், திம்மிநாயக்கன்பட்டி, சின்னபொட்டிபுரம், பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், நாகலாபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் குறுகிய கால சாகுபடியாக கிணற்று பாசனத்தில் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.  கடந்த கார்த்திகையில் விதைகள் பாவி அடியுரம் இட்டு செடியாக மற்றும் மருந்தடித்து 7 முறை களைகள் பறித்து தொழிலாளர்கள் என ஏக்கருக்கு ஒரு லட்சம் வரையில் செலவு செய்துள்ளனர். கிணற்று பாசனத்தில் வளர்க்க துவங்கி மார்கழி கடந்து தை இறுதியில் அறுவடைக்கு வந்து சேர்ந்தது. அறுவடை துவங்கி 15 நாட்களுக்கு ஒருமுறை 10 எடுப்புடன் பலன் வந்து முற்றிலும் நிறைவடையும். கார்த்திகைக்கு முன்பாக பல நூற்றுகணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் மழையினை மட்டும் நம்பி பருத்தியை வளர்த்து நட்டம் ஏற்படாத வகையில் பருத்தி அறுவடையினை முடித்தனர்.

  தற்போது கிணற்று பாசனத்தில் பாதியளவாக உற்பத்தி குறைந்து பனியால் வாடி பாதி கருகி விட்டதால் நட்டத்தை சந்திக்கும் நிலையினை எட்டியுள்ளனர். கடந்த பல மாதங்களுக்கு முன்பாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையானதால் விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர். தற்போது உற்பத்தியும் பாதியாகவும் விலையில் ரூ.3 ஆயிரத்து 600 என பாதியாகவும் குறைந்திருப்பதால் விவசாயிகள் போட்ட முதலாவது கிடைக்குமா என கவலை அடைந்துள்ளனர்.

Tags : Cotton farmers ,Bodi There ,Bodi , yield ,Bodi .,Cotton farmers, concerned
× RELATED போடி-தேவாரம் சாலையில்...