×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் பணம் கொடுத்து வெற்றி பெற்ற மேலும் ஒரு விஏஓ கைது : குரூப் 4 தேர்வில் புரோக்கராக செயல்பட்டதும் அம்பலம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வுகளில் முறைகேடாக பணம் கொடுத்து தேர்வு எழுதிய நபர்கள் மற்றும் குரூப்2ஏ, விஏஓ தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ள நபர்கள் என மொத்தம் நேற்று முன்தினம் வரை 45 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். விஏஓ தேர்வில் இடைத்தரகர் ஜெயகுமார் ஆலோசனைப்படி முறைகேடாக ரூ.9 லட்சம் பணம் கொடுத்து வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த அனிலாடியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் (எ) சக்தி என்பவர் மூலம் பணம் கொடுத்து வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது. மேலும், அமல்ராஜ் குரூப் 4 தேர்வில் விழுப்புரம் மாவட்டம் புரோக்கர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. குரூப் 4 ேதர்வில் எவ்வளவு போரில் பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டனர் என்பது குறித்து கைது செய்யப்பட்ட அமல்ராஜிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : VAO ,Group ,DNPSC , One more VAO arrested , making money payment
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!