×

காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் காவல் நீட்டிப்பு

நாகர்கோவில்: களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருவரின் நீதிமன்ற காவலை மார்ச் 13 வரை நீட்டித்து நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி மகிழேந்தி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தி 2 பேரின் காவலை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் (57) கடந்த ஜனவரி 8-ஆம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாக உசைன் ஷெரீப் என்பவா் தமிழ்நாடு கியூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். குற்றவாளிகளின் பணப்பரிவா்த்தனைக்கு உடந்தையாக இருந்த பிச்சைக்கனி, அமீா் மற்றும் முகமது அலி ஆகிய மூவரை, தேவிப்பட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

எஸ்.ஐ. வில்சன் கொலை குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடா்பு இருக்கலாம் எனக் கூறப்படுவதால், இவ் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து என்.ஐ.ஏ.வுக்கு ஞாயிற்றுக்கிழமை முறைப்படி மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையதாக கேரளாவில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் அப்துல் ஷமீம், தவுபிக் ஆகியோருக்கு கேரளாவில் வீடு எடுத்து கொடுத்த சையது அலியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Wilson ,murder ,Abdul Sameem , Wilson, murder
× RELATED சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா...