×

மயிலாடுதுறை அருகே சம்சாரம் கிடைக்காத விரக்தியில் மின்சாரத்தில் பாய்ந்த வாலிபர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சம்சாரம் கிடைக்காத விரக்தியில் மின்சாரத்தில் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கொடைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மணிகண்டன்(28). இவர் விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். இவர் தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தில் மது அருந்துவிட்டு வீட்டிற்கு வருவது வாடிக்கை. இவருக்கு பல்வேறு இடங்களில் திருமணத்திற்கு பெண் பார்த்தனர். குடி பழக்கம் இருப்பதால் இவருக்கு யாரும் பெண் தர முன் வரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, அதிக மதுபோதையுடன் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

தனக்கு திருமணம் ஏன் செய்து வைக்கவில்லை என்று தனது பெற்றோரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் இரவு 7 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ஆண்டாஞ்சேரி மாரியம்மன் ஆலய தென்னந்தோப்பிற்கு சென்றார். அங்கே இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி அதை கட்டிப்பிடித்தார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Mayiladuthurai ,suicide , Near Mayiladuthurai The despair of the samsara in despair
× RELATED கொடைக்கானல் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு