×

வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு; கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு : பல்வேறு துறைக்கான ஒதுக்கீட்டு விவரங்கள்..

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், செயல் திறன் மிக்கவர் என்பதை நிரூபித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இடைப்பட்ட இன்னல்களை எல்லாம் உடைத்து எறிந்தவர் ஜெயலலிதா. மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா என்பதை குறிப்பிட்டார். மேலும ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு,

*சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு

*பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு

*பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு

*தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு

*தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு

*அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி

*சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு

*நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு

*நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு

*திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு

*வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு

*அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1450 கோடி ஒதுக்கீடு

*வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன்

*நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு

*ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு

*கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு

Tags : Livestock Department , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED கால்நடை துறையுடன் இணைந்து பறவை...