×

வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி, கன்னட அமைப்புகள் மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின.    கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை  கொடுக்க வேண்டும் என்று மாநில அரசால் அமைக்கப்பட்ட டாக்டர் சரோஜினி மஹிஷி  தலைமையிலான ஆணையம் கடந்த 1986ம் ஆண்டு சிபாரிசு செய்திருந்தது. கடந்த 34  ஆண்டுகளுக்கு முன் கொடுத்த அறிக்கையை மாநில அரசு இன்னும் செயல்படுத்தாமல்  உள்ளது.  இந்த அறிக்கையை செயல்படுத்தக்கோரி கன்னட கூட்டமைப்பு சார்பில் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த போராட்டம் நடந்தது.

ஆனால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போராட்டத்திற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.  மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், ெபாதுத்துறை நிறுவனங்கள்,  தனியார் துறைகள் வழக்கம்போல் செயல்பட்டன. பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கின. பஸ் போக்குவரத்திலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.  ஓலா,  ஊபர் டாக்சி சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. சில ஆட்டோக்கள் மட்டும்  ஓடவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து ரயில் மூலம் பெங்களூரு வந்தவர்கள்  வீடு ெ்சல்ல சற்று தடுமாற்றம் அடைந்தனர்.



Tags : community ,Kannada ,Karnataka ,
× RELATED மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் 51% வாக்குப்பதிவு