×

கொடைக்கானல் பாச்சலூரில் மலைவாழைகளை துவம்சம் செய்த காட்டுயானைகள்: குடிசைகளையும் இடித்ததால் விவசாயிகள் பீதி

கொடைக்கானல்: கொடைக்கானல் பாச்சலூர் பகுதியில் புகுந்த காட்டுயானைகள் 500க்கும் மேற்பட்ட மலைவாழைகளை சேதப்படுத்தியதுடன், குடிசை வீடுகளையும் இடித்து தள்ளின. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.கொடைக்கானல் கீழ்மலையில் பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த நடனங்கால்வாய், சோளியப்பாறை, கரடிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மலைவாழை, ஆரஞ்சு, காப்பி, அவகோடா, அவரை, பின்ஸ் உள்ளிட்ட விவசாயம் நடக்கிறது. இப்பகுதி மக்கள் தோட்டங்களில் குடிசை அமைத்து வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட மலைவாழைகளை சேதப்படுத்தியது. மேலும் அவர்கள் தங்கியுள்ள குடிசை வீடுகளை இடித்தும் தள்ளின. இதனால் இரவுநேரங்களில் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் உயிருக்கு பயந்து மரங்களில் ஏறி விடிய, விடிய தூங்காமல் அமர்ந்து கொள்கின்றனர்.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை வெடிகள் வைத்து விரட்டினர். ஆனால் யானைகள் மீண்டும் சில நாட்களிலே அதே இடத்திற்கு வந்து விடுவதாகவும், இதனால் உயிருக்கு எந்நேரமும் அபாயம் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘யானைகள் சேதப்படுத்திய மலைவாழைகளுக்கு இழப்பீடு உடனே வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி யானைகள் நடமாட்டத்தால் உயிருக்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட தமிழக அரசு, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட மலைவாழைகளை சேதப்படுத்தியதுடன், அவர்கள் தங்கியுள்ள குடிசை வீடுகளை இடித்தும் தள்ளின. இதனால் இரவுநேரங்களில் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் உயிருக்கு பயந்து மரங்களில் ஏறி விடிய, விடிய தூங்காமல் அமர்ந்து கொள்கின்றனர்.

Tags : mountain forests ,demolition ,Kodaikanal Bachalur , Wild birds,started mountain, Kodaikanal Bachalur,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...