×

வராக்கடன் விவகாரம் பல வங்கிகளை முடக்கியுள்ளது: ஆக்சிஸ் வங்கி எம்டி தகவல்

மும்பை: ரியஸ் எஸ்டேட் துறையில் வீடுகள் கட்டுவதற்கு கடன் வழங்கும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (டிஎச்எப்எல்0 நிறுவனத்தின் கடனால் பல வங்கிகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இதனால், அரசு திட்டமிட்டுள்ள ரூ.100 லட்சம் கோடி அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதியை திரட்ட பெரும் சீர்திருத்தங்கள் தேவை என்று ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சவுத்ரி உரையாற்றினார். அப்போது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு முன்னேற்ற வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த லட்சியத்தை அடைய இந்தியாவில் சிரமங்களை சந்தித்து யார் முதலீடு செய்ய முன்வருவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 6 சதவீதமாக இருக்கும் என்று ஆக்சிஸ் வங்கியின் கணிப்பாக இருக்கிறது.

திட்டங்களுக்கு தேவையான நிதி தொழில் முனைவோர், வங்கிகள், புதிய நிதி நிறுவனங்கள், அந்நிய முதலீட்டாளர்கள், இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய நிதி போன்றவற்றிடம் இருந்து வர வேண்டும். இல்லை என்றால், டிஎச்எப்எல் போன்ற நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை பார்த்தாலே தெரியும். இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க யார் முன்வருவார்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் மொத்த விற்பனை துறையில் கடன் சுமை ரூ.22,000 கோடியாக இருந்தது. இது, பின்னர் ரூ.32,000 கோடியாக அதிகரித்தது.

இதன் சமீபத்திய நிலை ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் வங்குகள் 75 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. வங்கிகள் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதில் ஒரு வரை முறையை கடைப்பிடிக்க வேண்டும். கடன் வாங்கும் நிறுவனங்கள் அதை திருப்பிச் செலுத்தாவிட்டால் வங்கிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான். டிஎச்எப்எல் போன்ற நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்திவிட்டன. பொருளாதார மந்தநிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் சரி செய்தால்தான் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். இவ்வாறு அமிதாப் சவுத்ரி தெரிவித்தார்.

Tags : affair ,banks , Varakkadan, affair, multi-bank, disabled, Axis Bank, MD information
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...