×

31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்த இந்திய அணி!!: டி20 தொடருக்கு பழிதீர்த்தது நியூசிலாந்து

மவுண்ட்: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி


*நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று ஒயிட்வாஷ் சாதனை படைத்தது.

*இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின.

*ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் 4 வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, ஆக்லாந்தில் நடந்த 2வது போட்டியில் 22 ரன் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

டி20 தொடருக்கு பழிதீர்த்தது  நியூசிலாந்து

*இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானுயி, பே ஓவல் மைதானத்தில் இன்று நடந்தது. 3வது  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்த் அணி,  பந்துவீச்சை தேர்வு செய்தது.

*இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,  50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்களை மட்டுமே  எடுக்க முடிந்தது. கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 112 ரன்களை குவித்தார்.

*பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதல் பதற்றமின்றி விளையாடியது. தொடக்க வீரர் கப்தில் 66 ரன்களும், நிகோல்ஸ் 80 ரன்களும், கிரான்ட்ஹோம் 58 ரன்களும் சேர்க்கவே, 48வது ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 300 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

*இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. போட்டி நாயகனாக நிகோல்ஸும், தொடர் நாயகனாக டெய்லரும் அறிவிக்கப்பட்டனர்.

*டி20 தொடரை 5-0 என்று இந்திய அணி ஒயிட்வாஷ்  செய்த நிலையில் ஒரு நாள் தொடரை 3-0 என நியூசிலாந்து ஒயிட்வாஷ்  செய்து பதிலடி கொடுத்துள்ளது.

*இந்திய அணி கடைசியாக 1989 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 5-0 என ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது.

Tags : series ,New Zealand ,whitewash defeat ,revenge , New Zealand, Indian team, defeat, Whitewash, KL. Rahul
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...