×

ஜவுளி, கைவினைப் பொருட்கள், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு பல திட்டங்களை பட்டியலிட்டு மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி : ஜவுளி, கைவினைப் பொருட்கள், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு பல திட்டங்களை பட்டியலிட்டு மக்களவையில் நிர்மலா சீதாராமன் உரை நிகழ்த்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த 31ம் தேதி தொடங்கியது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் உரை மீது 2 அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்து உரையற்றினார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை பின்வருமாறு,

*பட்ஜெட் மீதான விவாதத்தில் கருத்து தெரிவித்துள்ள 98 உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

*தொழில் உற்பத்தி குறியீட்டு எண், அந்நிய முதலீடுகள் ஜனவரியில் அதிகரித்து உள்ளது  பிஎம்ஐ என்னும் தொழில் வளர்ச்சிக் குறியீட்டு எண்ணும் 55.3 புள்ளிகள் அதிகரித்து உள்ளது.

*சரக்கு, சேவை, வரி வசூல் ஜனவரி மாதத்தில் 1,10,828கோடியாக அதிகரித்துள்ளது. 2019 ஏப்ரலில் இருந்து தற்போது வரை ஜிஎஸ்டி வசூல் 6 மாதங்களில் ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது.

*நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 466 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தை ஊக்குவிக்க முக்கியமான 3 நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

*வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் தொழில்களுக்கு வங்கிகளின் கடன் உதவி அதிகரிக்கும்.

*பாதியில் நின்றுவிட்ட வீட்டு வசதித் திட்டங்களை நிறைவேற்ற நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

*விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மக்களின் பொருள் நுகர்வு அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

*நிறுவனங்களின் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் டிவிடெண்ட் மீதான வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வருமான வரி செலுத்தும் 5.78 கோடிப்பேர் பயன்பெறும் வகையில் வரி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

*ஜவுளி, கைவினைப் பொருட்கள், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

*மத்திய பட்ஜெட்டில் பழங்குடிகள் மற்றும் பட்டியலின சமுதாயத்தினருக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை.

*பட்டியல் இனத்தினர் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.82,257 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.53,653 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

*மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.

*2022ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரூ1.95 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.



Tags : speech ,Nirmala Sitharaman ,Lok Sabha , Textiles, Handicrafts, Sugar, Lok Sabha, Nirmala Sitharaman, Finance Minister, Federal Budget
× RELATED ஜூலை 22ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?