×

குமரி எஸ்எஸ்ஐ கொலை வழக்கு விசாரணை உபா சட்டத்தில் செய்யது அலி கைது: தென்காசி போலீசார் அழைத்து சென்றனர்

* 14 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இபிஎஸ், ஓபிஎஸ் அறிவுரை
* வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
* தோல்வி அடைந்தவர்களுக்கு அட்வைஸ்

சென்னை:  அதிமுக வளர்ச்சி பணி, தேர்தல் பணிகள் குறித்தும் அதிமுகவில் உள்ள அனைத்து மாவட்டங்களை (56 மாவட்டம்) சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 10ம் தேதி (நேற்று) முதல், 13ம் தேதி (வியாழன்) வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று முதல் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.

முதல் நாளான நேற்று காலை கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. காலை 10.30 மணிக்கு ெதாடங்கிய கூட்டம் பிற்பகல் 2.30 மணி வரை நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் இரவு 10 மணி வரை ஆலோசனை நடந்தது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பேசினர். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பேசும்போது, “நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். அதேநேரம் தோல்வி அடைந்த மாவட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு `அட்வைஸ்’ வழங்கினார்.

வருகிற 14ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டம் மார்ச் மாதம் வரை நடைபெறும். இதையடுத்து ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற இப்போதே மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தயாராக வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றால்தான் 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற முடியும். அதற்காக ஒவ்வொருவரும் முனைப்புடனும், ஒற்றுமையுடனும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் 14 மாவட்டங்களை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி செயலாளர்களும் கலந்து கொண்டனர். முதல் நாள் கூட்டம் முடிந்துள்ள நிலையில், இன்று 2வது நாளாக காலை திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம்,  தூத்துக்குடி வடக்கு, தெற்கு மற்றும் மாலையில் குமரி கிழக்கு, மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்திய, மேற்கு, திருவள்ளூர்  கிழக்கு, மேற்கு ஆகிய 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.



Tags : Ali ,murder trial ,SSI Kumari Seyed Ali ,Tenkasi , Kumari SSI murder case. Upa Law, Ali's arrest, Tenkasi police
× RELATED வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி...