×

ரவுடி கும்பல் பகீர் வாக்குமூலம் சீட்டுப்பணத்தை வாங்கி தராததால் நித்தியானந்தா சீடரை கொன்றோம்: மேலும் 2 பேர் கைது

வில்லியனூர்: புதுச்சேரி  அருகே ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). நித்தியானந்தாவின்  தீவிர சீடரான இவர் கடந்த 28ம்தேதி காரில் சென்றபோது கடத்திக் கொலை  செய்யப்பட்டார். மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.  பணத் தகராறில் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி அய்யனார் தலைமையிலான  கும்பல் வஜ்ரவேலை கடத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அய்யனார், ராஜவேலு, விஜய், அசோக், தனபாலன், சரத்குமார், சரபாலன் ஆகிய 7  பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் 7 பேரையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.  இதில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில்  கூறப்படுவதாவது:  வஜ்ரவேலின் உறவினர் பிரகாஷ் சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். ஆனால், சீட்டு முடிந்த நிலையிலும்  லட்சக்கணக்கில் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட  செம்பியம்பாளையம் இளவரசன், தனது மைத்துனரான ஆனந்த் என்பவரிடம்  இதுபற்றி தெரிவித்துள்ளார்.

அவர் ரவுடி அய்யனாரிடம் பணத்தை பெற்றுத்தருமாறு  கூறியுள்ளார். இதுெதாடர்பாக அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ஆனந்த், இளையரசன்  தூண்டுதலின்பேரில் அய்யனார் மற்றும் கூட்டாளிகள் பிரகாஷின் உறவினரான  வஜ்ரவேலுவை கடத்திச் சென்று பணத்தை வாங்க திட்டமிட்டனர். இதற்காக  சம்பவத்தன்று ரூ.5 ஆயிரம்  வாங்கி குடித்துவிட்டு காத்திருந்த அய்யனார்  தலைமையிலான கும்பல் புதுக்குப்பம் நாகமுத்து மாரியம்மன் கோயில் அருகே  தனியாக காரில் சென்ற வஜ்ரவேலுவை வழிமறித்து அவரது காரில் ஏறி கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை  நிர்வாணப்படுத்தி  அடித்து துன்புறுத்தி பிரகாஷிடம்  சீட்டுப்பணத்தை பெற்றுத்தருமாறு மிரட்டி உள்ளனர். பணம் இல்லை  என்று கூறியதால், அவரை கத்தியால் வயிற்றில் குத்தி கொன்றுள்ளனர். பின்னர் அவரது உடலை டிக்கியில் போட்டு எடுத்து சென்று குருவிநத்தம்  பகுதியில் காரை நிறுத்தி விட்டு பண்ருட்டிக்கு தப்பினர்.  

பின்னர் வழக்கறிஞர் உதவியுடன் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.  கொலையில் ஆனந்த், இளவரசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரையும் தனிப்படை கைது செய்துள்ளது.   ரூ.2 லட்சத்துடன் தலைமறைவான பார்த்தசாரதியை போலீசார் தேடி  வருகின்றனர். ரவுடி கும்பலிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய  கத்தி, செல்போன், ைபக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல்  செய்தனர். காவலில் எடுக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரும் நேற்று மாலையில் கோர்ட்டில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Nithyananda ,disciple ,gang ,Rowdy ,Bhagir ,Fakir , Nithyananda disciple murder, 2 arrested
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...