×

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 ஓட்டுனர்கள் கைது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர் சிபிசிஐடி போலீசார்

சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னையை சேர்ந்த 3 ஓட்டுனர்கள் கைது குறித்த விவர அறிக்கையை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். சென்னை என்னுரை சேர்ந்த கார்த்திக், செந்தில்குமார், பெரம்பூரை சேர்ந்த சாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள். ராமநாதபுரத்தில் இருந்து குரூப்-4 விடைத்தாள்களை சென்னைக்கு எடுத்து வந்த வாகனங்களை கார்த்திக், செந்தில்குமார் ஒட்டி வந்தனர். விடைத்தாள்களை ஏற்றி சென்ற கார் சென்ற பாதையில் வாகன சோதனை நடைபெறுகிறதா என்பதை 3 ஓட்டுனரும் கண்காணித்து கூறியதாக புகார் அளித்துள்ளனர்.


Tags : CBCID ,arrest ,drivers ,Group-4 ,CBCID Police , Group-4 selection, abuse, drivers, reporting, CBCID police
× RELATED நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு