×

திருத்துறைப்பூண்டி பகுதியில் இயந்திரம் தட்டுப்பாடு: சம்பா அறுவடை பணிகள் பாதிப்பு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த ஆண்டு 37 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீர் பிரச்னை, உரத்தட்டுபாடு போன்ற பல்வேறு போராட்டகளுக்கு இடையில் செய்த சம்பா சாகுபடி அறுவடைக்கு வந்த நிலையில் ஜனவரி 17ம் தேதி பெய்த மழையில் கதிர்கள் சாய்ந்து மேலும் அறுவடை வயல்களில் தண்ணீர் நின்றதால் அறுவடை பாதித்தது. மேலும் கதிர் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு காரணமாக அறுவடை பாதித்து வந்தது. தற்போது 25 வீதவீதம் தான் அறுவடை முடிந்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் அறுவரை முடிந்து விடும். ஆனால் தற்போது கதிர் அறுவடை இயந்திரத்தால் அறுவடை பாதித்து மார்ச் மாதம் வரை நீடிக்கும் நிலை உள்ளது.

எனவே திருத்துறைப்பூண்டி தாலுகாவில் அறுவடை முடிக்க போதுமான கதிர் அறுவடை இயந்திரங்களை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும் இந்த ஆண்டு அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தாலுகா முழுவதும் 58 அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கொள்முதல் நிலையத்தில் 1000 நெல் மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே தினந்தோறும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை காக்க வைக்காமல் கொள்முதல் செய்திட வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags : area ,Samba ,Thirupuraipoondi , Thirupathi pondi, machine shortage, samba harvesting
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை