×

கொடைரோடு ரயில்வே குடியிருப்பு அருகே மண் குவியலால் விஷ ஜந்துக்கள் அபாயம்

வத்தலக்குண்டு: கொடைரோடு ரயில்வே குடியிருப்பு அருகே இடித்த கட்டிட கல், மண்ணை குவிப்பதால் விஷ ஜந்துக்கள் தங்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொடைரோடு ரயில் நிலையம் அருகே ரயில்வே பணியாளர்களுக்கு என 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. இதன் அருகில் இரவு நேரங்களில் சமுக விரோதிகளால் பழைய கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதி புதிய கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் எனவும் ரயில்வே குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி ரயில்வே குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘இப்பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் லாரி லாரியாக பழைய கட்டிட கழிவுகளை கொண்டுவந்து இப்பகுதியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதில் கான்கிரட் சிலாப்புகள், செங்கல் கட்டிடங்கள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் கூடிய கட்டிட கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஏற்கனவே புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் முட்புதர்கள் சூழ்ந்து விஷ ஜந்துக்கள் நடமாட்டமும், சமூக விரோதிகள் கூடாரமுமாக மாறி உள்ள புதிய கட்டிடம் அருகே கொட்டப்படும் பழைய கட்டிட கழிவுகளால் மேலும் இந்த கட்டிடத்தை பாழ்படுத்தும் நிலை உள்ளது. இப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் மற்றுமின்றி பெரியோர்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் இவ்வாறு சமூகவிரோதிகள் கொட்டி வருகிறன்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

Tags : railway quarters ,Railway ,mud piles , Kodirod Railway Quarters, Soil Heap
× RELATED ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும்...