×

கழிவுநீர் அகற்றுவதில் மனிதர்கள் ஈடுபடுவதை தடுக்க நவீன துப்புரவு கருவிகள் வாங்குவதற்காக ஒவ்வொரு நகராட்சிக்கும் தலா 50 லட்சம்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை: கழிவுநீர் அகற்றுதலில் மனிதர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்ற வைகோவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் பேசும்போது, கழிவுநீர் அகற்றுதலில் மனிதர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?. கடந்த 3 ஆண்டுகளில் கழிவுநீர் அகற்றுதல் பணிகளின்போது இந்தியா முழுமையும், மாநில வாரியாக எத்தனை பேர் இறந்தனர்?, துப்புரவு பணிகளில் மனிதர்களுக்கு பதிலாக அதற்கு உரிய கருவிகளைக் கொண்டு செய்வதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?, துப்புரவு கருவிகளை நகராட்சிகளுக்கு வழங்கும் திட்டம் ஏதும் அரசின் கவனத்தில் இருக்கின்றதா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே,” மாநில வாரியாக2016 முதல் 2019 (நவம்பர் வரை)மொத்தம் 282 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 40 பேர் இறந்துள்ளனர். துப்புரவு தொழிலாளர்களுக்கான நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் அனைத்து நகராட்சிகளிலும் ஒப்பந்ததாரர்களுக்கு, கழிவு அறைகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை அளித்து வருகின்றது. 2018-19ம் ஆண்டில் அவ்விதம் 458 பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன. மேலும் இந்நிறுவனம், மின் துப்புரவு கருவிகளை வாங்குவதற்காக ஒவ்வொரு நகராட்சிக்கும் தலா ரூ.50 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. துப்புரவு பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.



Tags : municipality ,Vaiko ,The Union Minister , prevent humans , modern, municipality,Vaiko question
× RELATED கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...