×

வெயில் காலம் தொடங்கியதும் வைரஸ் தாக்கம் குறையும்: எம்.எம்.காசிம், நோய் தொற்று, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்

சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் கிருமி தொற்று பரவியுள்ளது. சீனாவில் தங்கி வந்தவர்கள், படித்து வந்த மாணவர், மாணவிகள் என்று சிலரை  தாக்கியுள்ளது. ஆனால் சீனாவுக்கு சென்று வராத மக்கள், சீனா வழியாக பயணிக்காத மக்களை இந்த கிருமி பாதிக்கவில்லை. குவாரன்டைன் என்பது நோயின் அறிகுறிகள் இருப்பவர்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தி வைப்பது ஆகும். குறிப்பிட்ட 14 நாட்களில் கிருமி பாதிப்பு அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும். அதன் பின் தான் நோயின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது போல் வுகானில் மருத்துவம் படிக்க சென்ற நம் மாணவர்கள் இந்தியா வரவழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  கேரளாவில் 4 பேர் இதுபோல் தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் மாநில அரசு கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. நம் நாட்டை பொறுத்தவரை புதிதாக இங்கு யாருக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை. அரசுத்தரப்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். கடந்த 2002ம் ஆண்டுக்குபின் சீனாவில் சார்ஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டது. அப்போது இருந்ததை விட இரு மடங்கு கண்காணிப்பை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக அளவில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு நோய் கிருமிக்கு தடுப்பு மருந்தை உடனடியாக கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எந்த ஒரு வைரஸ் கிருமியும் வேகமாக பரவி வேகமாக பாதிப்பு ஏற்படுத்திய காலகட்டத்தை பார்த்தால் பெரும்பாலும் குளிர் காலமாகவே இருக்கும்.சீனாவில் தற்போது குளிர்காலம். சீனாவின் சில பகுதிகளில் பனிப்பொழிவு இருப்பதாக கேள்விப்பட்டேன். கோடை காலம் தொடங்கியதும் வைரஸ் பரவுவதன் வீரியம் குறையும். இந்த வைரஸ் கிருமி செயல்பாடு இல்லாத நிலைக்கு சென்றுவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 700யை தாண்டியுள்ளது.   அது வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே, மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சீன அரசும் அங்கு வெப்பநிலை எப்போது அதிகரிக்கும் என்று காத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அதனால் வெப்பநிலை உயரும் போது கொரோனா வைரஸ் கிருமி தாக்குதல் வீரியம் குறையும். அப்போது உயிரிழப்புகள் இருக்காது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களும் எளிதில் குணமாகிவிடுவார்கள்.

 தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால், சீனாவோ அல்லது பிற நாடுகளை போலவோ அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தேவையில்ைல. முகக்கவசம் உட்பட பிற பாதுகாப்பு சாதனங்கள் உடன் தான் கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்திய அரசும் உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அப்போது தான் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும். கேரளாவில் கொரோனா அறிகுறி உள்ள 4 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம். வெப்பநிலை உயரும் போது கொரோனா வைரஸ் கிருமி தாக்குதல் வீரியம் குறையும். அப்போது உயிரிழப்புகள் இருக்காது. இந்த  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களும் எளிதில் குணமாகிவிடுவார்கள்.

Tags : pediatrician , sun starts, Decreased ,viral , MM kasim, infection, Pediatrician
× RELATED பெல் நிறுவனம் கைப்பற்றியது 10ம்...