×

பலமுறை நோட்டீஸ் தந்தும் விசாரணைக்கு டிமிக்கி எஸ்ஐ சம்பளம் நிறுத்தம்: உபி நீதிமன்றம் அதிரடி

முசாபர்நகர்: பலமுறை நோட்டீஸ் விடுத்தும், டிமிக்கி கொடுத்து வந்த போலீஸ் எஸ்ஐயின் சம்பளத்தை நிறுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2006ல் உள்ளாட்சி தேர்தல் நடந்த போது, சமாஜ்வாடி கட்சி தலைவரான முசாபர் ரானா சுட்டுக் கொல்லப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு, முசாபர்நகரில் இருந்து மீரட்டின் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி கதிர் ரானா, அவரது சகோதரரும் முன்னாள் எம்எல்ஏவுமான நூர் சலீம் ரானா ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இவ்வழக்கு பல ஆண்டாக மீரட் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில் விசாரணை அதிகாரியான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தீபக் மாலிக் ஆஜராகி விளக்கம் தர நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்தது. ஆனால், பலமுறை நோட்டீஸ் தந்தும் தீபக் மாலிக் ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தார். இதனால் கடுப்பான நீதிபதி, எஸ்ஐ தீபக் மாலிக்கின் சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து, வரும் 19ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.


Tags : hearings ,UP Court ,Dimicky SI , SI, Salary Stop, Ubi Court
× RELATED தேர்தல் விதிமுறை மீறல் நடிகை ஜெயபிரதாவை கைது செய்ய உத்தரவு