×

எல்லா தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் எப்படி தகுதியை நிர்ணயிக்க முடியும் ? : முதல்வர் பழனிசாமி கருத்து

கோவை : தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை தலைவாசலில் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.மேலும் டிஎன்பிஎஸ்சி  முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி  நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் முதல்வர் பழனிசாமி பேட்டியில் கூறியது குறிப்புக்களாக பின்வருமாறு,

 *டிஎன்பிஎஸ்சி ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடந்திருக்கும் முறைகேடு குறித்து விசாரணை நடைபெறுகிறது.

*தேர்வு முறைகேட்டில் யார் தவறு செய்திருந்தாலும் டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுக்கும்.

*எல்லா தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் எப்படி தகுதியை நிர்ணயிக்க முடியும்

*தேர்வுகளை ரத்து செய்துவிட்டால் மாணவர்கள் உள்நாட்டில் தான் இருக்க வேண்டும்.

*தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

*சிஏஏவுக்கு எதிராக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்துவது அவரது விருப்பம்.

*காலணியில் இருந்த குச்சியை எடுக்க முடியாததால் சிறுவனை அழைத்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

*இந்து பயங்கரவாதம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல. அவரது சொந்த கருத்து.

*நடப்பாண்டில் நன்றாக மழை பெய்துள்ளதால் தமிழகத்தில் வறட்சி என்பதே இல்லை.

*பள்ளி மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


Tags : Palaniswami , DNBSC, CM Palanisamy, Livestock Park
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...