×

மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு துறையின் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, ‘மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆராய்வதற்காக, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் அறிஞர்கள் குழுவை அமைத்தது. இந்தக் குழுவினர் பரிந்துரைகளின்படி, கே.கஸ்தூரிரங்கன் தலைமையில், உயர்நிலை செயல் ஆக்கக் குழு அமைக்கப்பட்டடு, அந்த குழு பரிந்துரைகளின்படி, இயற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தது.

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. மேலும், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவி இருக்கின்ற 56,825 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை, மிகவும் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியாக அறிவித்தது. அதன்படி, அந்தப் பகுதியில் அழிவுப் பணிகள் எதையும் மேற்கொள்ள இயலாத அளவிற்குத் தடை விதிக்கப்பட்டது எனத்தெரிவித்தார்.

Tags : Vaiko ,Parliament ,Western Ghats , Western Ghats, Parliament, Vaiko
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...