×

சபரிமலை கோவில் நிர்வாகம், பக்தர்கள் நலனுக்காக சட்டம் இயற்றுவதில் உள்ள சிக்கல் என்ன ?: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி : சபரிமலை கோவில் நிர்வாகம், பக்தர்கள் நலனுக்காக சட்டம் இயற்றுவதில் உள்ள சிக்கல் என்ன என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சபரிமலை கோவிலுக்காக பந்தள அரச குடும்ப பாதுகாப்பில் வெறும் 16 ஆபரணங்கள் தான் உள்ளதா என்றும் பந்தள அரச குடும்பத்திடம் நகைகள் இருந்தாலும் அவை கடவுளுக்கு சொந்தமானதுதானே என்றும் சபரிமலை கோயில் ஆபரண பாதுகாப்பு வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் வினவியுள்ளது.


Tags : Sabarimalai ,temple administration ,pilgrims ,administration ,Government , Sabarimalai, Temple, Supreme Court, Question, Central Government
× RELATED சித்திரை விஷு சிறப்பு பூஜை; சபரிமலை கோயில் நடை 10ம் தேதி திறப்பு