×

யு19 உலக கோப்பை பைனலில் வங்கதேசம்

பாட்செப்ஸட்ரூம்: ஐசிசி யு19 உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப்போட்டி தென் ஆப்ரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து-வங்கதேச அணிகள் மோதின.  டாஸ் வென்ற வங்க தேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் வங்கதேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. ஒருகட்டத்தில் அந்த அணி 25.4 ஓவருக்கு 4 விக்கெட்களை இழந்து 74 ரன் எடுத்து தடுமாறியது. வீலர் கிரீன்ஆல் 75, நிகோலஸ் லிட்ஸ்டோன் 44 ரன் இருவரும் பொறுப்பாக விளையாட நியூசிலாந்து 50ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்தது. வங்கதேசத்தின் ஷோரிபுல் இஸ்லாம் 3,  ஷமீம் ஹோசைன், ஹசன் முராத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் நிதானமாக விளையாடினர். பர்வேஸ் ஹோசைன் 14, தன்ஜித் ஹசன் 3 என்று ஒருப்பக்கம் குறைந்த ரன்னில் வெளியேறினாலும்,   தவ்ஹித் ஹரித்ேடாய் 40, ஷகாதத் ஹோசைன் 40*, அதிலும் சதம் விளாசிய மஹமதுல் ஹசன் ஜாய் 100(127பந்து, 13 பவுண்டரி)  ஆகியோர் பொறுப்பாக விளையாடி ரன் குவித்தனர். அதனால் வங்கதேசம் 44.1 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து  215 ரன் குவித்தது. எனவே  வங்கதேசம் 6 விக்கெட்டில் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நியூசிலாந்து தரப்பில்  ஹன்குக், கிளார்க், ஜேசி டஷ்காப்,  ஆதித்யா அசோக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில்  இந்திய அணியை எதிர்த்து விளையாடும். நாளை நடைபெறும் 3,4வது இடங்களுக்கான போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும்.

Tags : Bangladesh ,final ,U19 World Cup , U 19 World Cup, Bangladesh
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...