×

மோடியை எதிர்த்து கோஷம் உபி.யில் 135 பேர் மீது வழக்கு பதிவு

அசாம்கர்: உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த மாதம் போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறைகள் நடந்தன.  இதில், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இழப்பீடு கோரி அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், பிலாரியகன்ஞ் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக 135 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் 35 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மீதமுள்ள 100 பேர் அடையாளம் தெரியாத நபர்களாவர். இது குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் திரிவேணி சிங் கூறுகையில், “ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்துக்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக தவறான வாசகங்களை பயன்படுத்தி முழக்கமிட்டனர். அதனால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலமா கவுன்சில் தலைவர்கள்  நூருல் ஹூடா, மிர்சா ஷானி ஆலம் மற்றும் ஒசாமா தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்,” என்றார்.


Tags : Modi , Modi, 135 others booked
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...