×

கடந்த கால பிரச்னைகளுக்கு மோடி ஆட்சியில் தீர்வு: விழிப்புடன் இருக்காவிட்டால், மீண்டும் முகலாய ஆட்சி...நாடாளுமன்றத்தில் பா.ஜ., எம்.பி பேச்சு

டெல்லி: பெரும்பான்மை சமுதாயம் விழிப்புடன் இருக்காவிட்டால், இந்தியாவில் மீண்டும் முகலாய ஆட்சி திரும்பும் என பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். கடந்த 31-ம் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அடுத்த நாள் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில்,  ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தீர்மானத்தின் மீதான விவாத்தின்போது பேசிய கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதி பாஜக எம்.பி, தேஜஸ்வி சூர்யா, இந்தியாவில், பெரும்பான்மை சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறினால், முகலாய ஆட்சி திரும்புவதற்கு நீண்டநாள் ஆகாது. நீண்ட நாட்கள் இருக்கும் பிரச்னைகளை தீர்க்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்தாமல், புதிய இந்தியாவை உருவாக்க முடியாது.

ஆப்கன், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. யாருடைய குடியுரிமையையும் பறிக்க கொண்டு வரப்படவில்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட பல பிரச்னைகளுக்கு மோடி ஆட்சியில் தீர்வு காணப்பட்டுள்ளது. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, ராமர் கோயில் கட்டுதல், முத்தலாக் முறை ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தேஜஸ்வி சூர்யா கூறினார்.


Tags : Modi ,Mughal ,India , Modi regime resolves many issues in the past: Mughal rule in India
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை