×

கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சி 2 பேர் கைது

சென்னை: ராயப்ேபட்டையை சேர்ந்தவர் சாதிக்பாஷா (28). வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கைதி சாதிக் பாஷாவை பார்க்க நண்பர்கள்  ராயப்பேட்டையை சேர்ந்த  இம்தியாஸ் (19), சையது சமீது (20) சிறைக்கு வந்தனர். அப்போது அவர்கள் கையில் பிரட் பார்சலுடன் வந்தனர். சப்-ஜெயிலர் செல்வா சந்தேகமடைந்து பிரட் பார்சலை வாங்கி பார்த்தபோது உள்ளே 50 கிராம் கஞ்சா, பீடி பாக்கெட், லைட்டர்  இருந்தது தெரிந்தது. உடனே சம்பவம் குறித்து சப்-ஜெயிலர் செல்வா கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சென்று இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, பீடி, லைட்டர் பறிமுதல்  செய்யப்பட்டது.

Tags : prisoner ,Ganja , Prisoner, cannabis, 2 others arrested
× RELATED தந்தை, பாட்டியை கொலை செய்த ஆயுள் கைதி...